இதை பாதிக்கும் காரணிகள் பல உள்ளன.
1- விண்ணப்பதாரி பிழையான தகவல்களை தெரிவித்துள்ளமை.
2- விண்ணப்பதாரி பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளமை.
3- விண்ணப்பதாரர் அளித்த தகவல் வங்கிக் கணக்குத் தகவலுடன் பொருந்தவில்லை.
4- விண்ணப்பதாரரின் தேசிய அடையாள அட்டை அல்லது கும்பத்தில் உள்ள வேறொரு நபரின் தேசிய அடையாள அட்டையானது வேறொரு குடும்பத்தில் உள்ள ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் ஒத்து இருப்பதால். (இரண்டு இடங்களில் ஒரே தேசிய அடையாள அட்டை எண் இருப்பது.)
5- ஒரு தொழில்நுட்ப பிரச்சனை.
மேற்கூறிய காரணங்கள் எமது கணினி முறைமையுடன் திருத்தப்படவேண்டும் மற்றும் கணக்கு வைத்திருப்பவர் தொடர்பானவை வங்கியின் ஊடாகவும் விண்ணப்பதாரர் தொடர்பானவை பிரதேச செயலகத்தினூடாகவும் கணனி முறைமையில் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன் பிறகு, உரிய பணம் கணக்கில் வரவு வைக்கப்படும்