எமது நோக்கம்
""தேவைப்பாடுள்ளவர்களுக்கு அஸ்வெசும வழங்கி இலங்கையின் ஏழை மக்களின் வாழ்வை வசதியானதொரு நிலைக்கு உயர்த்தும் பயணத்தில் முன்னோடியாக இருத்தல்""
நலன்புரி நன்மைகள் சபையானது, நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரிவு 3 இன் அடிப்படையில் நிறுவப்பட்டது. இது 15 ஆம் திகதி பிப்ரவரி மாதம் 2016 முதல் செயற்படுகிறது. 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானியின் கீழ் அதிவிசேட வர்த்தமானி இலக்கம் -1952/22 , பெப்ரவரி 02, 2016 செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.
நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 2வது பிரிவின்படி அரசியலமைப்பு சபையின் ஆலோசனையுடன் கௌரவ. நிதி அமைச்சர் அதன் ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களை நியமித்துள்ளார். நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின்படி நலன்புரி நன்மைகள் சபையின் முக்கிய செயல்பாடுகள் பின்வருமாறு;.
""தேவைப்பாடுள்ளவர்களுக்கு அஸ்வெசும வழங்கி இலங்கையின் ஏழை மக்களின் வாழ்வை வசதியானதொரு நிலைக்கு உயர்த்தும் பயணத்தில் முன்னோடியாக இருத்தல்""
“அளவுகோல்களின் அடிப்படையில் ஒரு வெளிப்படையான தெரிவுச் செயல்முறை மூலம் தீவின் அனைத்து நலன்புரி நன்மைத் திட்டங்களின் கீழ் தகுதி பெறும் நபர்களை தொடர்ச்சியாக அடையாளம் காணுதல் , நன்மைகளை வழங்குதல் மற்றும் நன்மைகளை முடிவுறுத்தல் தொடர்பாக பங்குதாரர்களுக்கு அனுசரணையாக ஒருங்கிணைந்த நலன்புரி நன்மைத் தகவல் முறைமையினை நிறுவிப் பராமரித்துச் செல்லல்.”